• Sep 08 2025

ராப் பாடகர் வேடன் மீது புகாரளித்த 2 பெண்கள்..! வெளியான அதிர்ச்சித் தகவல்கள் இதோ.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், தற்போது பல பாலியல் புகார்களின் மையக் கதாபாத்திரமாக மாறியுள்ளார். சமீபத்தில் ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் பின்னணியில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில், தற்போது மேலும் இரு பெண்கள் அவரது மீது பாலியல் புகார்களை எழுப்பியுள்ளனர். இது தற்போது மாநிலத்தையே உலுக்கி விட்ட பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது.


ஆரம்பத்தில் ஒரு பெண் மருத்துவர் புகாரளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், வேடன் தலைமறைவானார்.

இப்போது அந்த சம்பவத்துக்குப் பிறகு, இரு பெண்கள் புதிய புகார்களை முன் வைத்துள்ளனர். அந்த புகாரில் இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி கொச்சிக்கு வரவழைத்து வேடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. 


வேடன், இதற்கு முன்னர், தன் மீதுள்ள புகார்கள் பொய் எனக் குறிப்பிட்டு, முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் படி கேரளா உயர்நீதிமன்றத்தில்  இன்று (18 ஆகஸ்ட்) விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement