• Feb 05 2026

ரோகிணிக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த முத்து.? பொய் சொல்லி மாட்டிய மனோஜ்..டுடே ரிவ்யூ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் ,  மீனாவுக்கு  ரோகிணி பற்றிய ரகசியங்கள் எல்லாம் தெரிய வருகிறது. இதனை குடும்பத்தாரிடம் சொல்லியே தீருவேன் என்று  மீனா ஒற்றை காலில் நிற்க,  நீங்க சொன்னா நானும் க்ரிஷும் குளத்தில் விழுந்து செத்து விடுவோம் என்று எமோஷனல் பிளாக்மெயில் பண்ணுகிறார் ரோகிணி. இதனால் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறார் மீனா.

இதை தொடர்ந்து  பாட்டி வீட்டில் அண்ணாமலை குடும்பத்திற்கு விருந்து ஏற்பாடு நடக்கின்றது. அதற்காக  இலை வாங்கி வர முத்து செல்கின்றார். இதன் போது அங்கு க்ரிஷையும் அவருடைய பாட்டியையும் சந்திக்கின்றார். உடனே அவர்களை  தங்களுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கின்றார். அவர்களும் வேறு வழியின்றி செல்லுகின்றார்கள் . 

இன்னொரு பக்கம்  குடும்பத்தாரை ரோகிணி ஏமாற்றியதை பற்றி யோசனையில் இருக்கும் மீனா,  சமையலில் சொதப்பி விடுகின்றார்.  அந்த நேரத்தில்  நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருப்பதாக முத்து சொல்ல, மீனாவும் ஆவலுடன் பார்க்கின்றார் . 


இதை பார்த்து ரோகிணி வெடவெடுத்து போக, மீனாவிடம் சென்று முத்துக்கு எதுவும் தெரியாது தானே என்று கேட்க,  அவருக்கு உண்மை தெரிந்திருந்தால் இந்நேரம் நீ வெளியே போய் இருப்ப என்று பதிலடி கொடுக்கின்றார் மீனா. 

மேலும் உண்மையை மறைக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி தனக்கு உறுத்துவதாகவும், அவர்களுடைய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்றும் மீனா கூற,   உணர்ச்சி வசப்பட்டு யார்கிட்டயும் உண்மையை சொல்லிடாதீங்க என்று ரோகிணி கெஞ்சுகின்றார். 

எனினும் மீனா,  இப்ப கூட ஒன்னும் இல்ல எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லு என்று சொல்ல, நான் கண்டிப்பா எல்லார்கிட்டயும் ஒரு நாள் உண்மையை சொல்லுகின்றேன். ஆனா இப்ப வேண்டாம்  என்று சொல்லுகின்றார். 

இறுதியில் வீட்டில் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க , மனோஜ் முட்டையை வைத்துக்கொண்டு இல்லை என்று பொய் சொல்லுகின்றார்.  இது குடும்பத்தாருக்கு தெரியவந்து உண்மையை மறைப்பது  மிகப் பெரிய தப்பு  என்று அண்ணாமலையும் பாட்டியும் அதைப் பற்றி பேச,  ரோகிணியும் மீனாவும்  என்ன செய்வது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்படுகின்றனர். 

Advertisement

Advertisement