• Jan 19 2025

கணவர் விபத்தில் சிக்கி விட்டார்,யாருடைய உதவியும் இல்லை- நடிகை வினோதினி கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பிரபலம் தான் நடிகை வினோதினி. இவர் மணல்கயிறு என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இதனை அடுத்து வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தில் நாயகனாக பிரசாந்த் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அண்மையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில் என் கணவர் ஒரு விபத்தில் சிக்கினார். 20 வயதுள்ள இரண்டு பேர் பைக்கில் வந்து அவரை மோதிவிட்டு சென்றுவிட்டனர். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. 


விபத்தை ஏற்படுத்திவிட்டு பத்தாயிரம் ரூபாயை மட்டும் அபராதமாக செலுத்திவிட்டு சென்று விட்டனர். நம் நாட்டில் வாழ்க்கையின் விலை இவ்வளவு தானா என்று தெரியவில்லை. அந்த விபத்திற்கு பின் என் குடும்பம் மிகப்பெரிய துன்பத்தை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் நான் தனி ஆளாக ,யாருடைய உதவியும் இல்லாமல் இருந்தேன். நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும் ஒரு சிலர் மட்டுமே என்னை வந்து பார்த்தார்கள். அனைவரும் சேர்ந்து வந்து இருந்தால், விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்து இருக்கலாம். 

விபத்திற்கு பின் என் கணவரை மீட்டு கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டேன். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக பல கஷ்டங்களை அனுபவித்தேன். எவ்வளவு செலவாகும் என்று சொல்ல முடியாது. என்னிடமிருந்தோ அல்லது என் கணவர் குடும்பத்திலிருந்தோ எந்த உதவியும் இல்லை. போன் பண்ணி மட்டும் என்ன வேண்டும் என்ன வேண்டும் என்று மட்டும் கேட்டார்கள். என் குடும்பத்திற்காக நான் மட்டுமே இருந்தேன், எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement