• Jan 20 2025

வந்த உடனேயே வேலைய ஆரம்பிச்சாச்சு! வேட்டையன் படத்துக்காக ரஜனி செய்த செயல்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ரஜனி காந்த் ஆவார். இது வரை பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணியாக இருக்கும் இவர் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் வேட்டையன் ஆகும். குறித்த படம் தொடர்பில் புது அப்டேட் கிடைத்துள்ளது. 


வேட்டையன் வெளியாக காத்திருக்கும்  அதிரடி ஆக்சன்  திரைப்படமாகும் . டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். குறித்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் பாசில் , ராணா டக்குபதி , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் அடங்கிய இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கின்றார்.


இந்த நிலையிலேயே குறித்த படம் தொடர்பாக புது அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ‘வேட்டையன்' பட டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். குறித்த படத்தில் ரஜனி காந்த் போலீசாக நடிக்கின்றார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement