• Jan 20 2025

இயக்குனர் எச்.வினோத் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, ரசிகர்கள் உஷார் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் வசூல் வேட்டை இயக்குனர் பட்டியலில் முக்கிய இடம்பிடிப்பவர் இயக்குனர் எச்.வினோத்.2014 ஆம் ஆண்டு வெளியான  சதுரங்க வேட்டை (2014) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  இயக்குநராக அறிமுகமானார் .


தொடர்ந்து விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இவருக்கான பெரும் அங்கீகாரத்தை வழங்கியது.தொடர்ந்து நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை,வலிமை,மற்றும் துணிவு வணிக ரீதியாக பெருவெற்றி பெற்ற  படங்களை இயக்கினார்.


அரசியலுக்கு முன்னதாக தளபதி விஜயின்  இறுதி படத்தையும் எச்.வினோத் தான் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தான் எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என குறித்த செய்தியை உண்மையில்லை என மறுத்திருந்தார் எச்.வினோத்.


இந்நிலையில் சமீபத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் போன் கால்கள் மூலம் இயக்குநர் எச்.வினோத்தின் அடுத்தப் படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை எனவும் எச்.வினோத் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை எனவும்  அவர் தரப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

Advertisement

Advertisement