• Jan 18 2025

இந்திய சினிமாவில் இவருக்குத்தான் அதிக டிமாண்ட்! யார் இந்த குழந்தைனு இப்போ தெரியுதா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக திகழும் நடிகர், நடிகைளின் சிறு வயது புகைப்படம் தற்போது ஒரு டிரெண்ட்டாக காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு டிரெண்ட் பிரபலமாக இருக்கும்.

அதன்படி, ரசிகர்கள் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் உள்ள  பிரபலங்களின் குழந்தைப் பருவ போட்டோக்களைப் பகிர, பலரும் தங்கள் யூகங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


அந்த வகையில், தற்போது இந்திய சினிமாத் துறையில் உச்ச நட்சத்திரமாக திகழும் நபரொருவரின் குழந்தைப் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

அத்துடன், தனது 10 வயதில் இருந்தே இசை துறையில் சாதிக்க தொடங்கிய இக் குழந்தை,  2011 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில்   "Why this Kolaveri d" பாடலின் மூலம் உலகளவில் பிரபலமானார். அவர் தான் அனிருத் ரவிச்சந்திரன்.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதாவின் தங்கை மகன் தான் அனிருத்.இவரின் இசையால் ரசிகர்களை வெகுவாக கட்டிப்போட்டார்.

தமிழ் சினிமாவில்  நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். தற்போது, அனிருத்தின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement