• Sep 20 2024

ராணுவ முகாமில் சாய் பல்லவி.. கிளீன் ஷேவுடன் எஸ்கே.. மீண்டும் லீக்கான படத்தின் காட்சிகள்! அதிர்ச்சியில் படக்குழுவினர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்  இவரது நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாகவே காணப்படுகின்றது.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக மாவீரன் திரைப்படம் வெளியானது,இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அடுத்து இவரது நடிப்பில் அயலான் என்னும் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் Sci-Fi கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.


தொடர்ந்து இவரின் 21வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் விரையில் படத்தின் பெயர் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் அடுத்த காட்சிகள் மீண்டும் இணையத்தில் லீக்காகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால்  படக்குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 


அதன்படி தற்போது வெளியான காட்சியில், ராணுவ முகாம் ஒன்றில் சாய் பல்லவி இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் இளம் ராணுவ வீரராக உடனிருப்பதாகவும் உள்ளது.

இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய புதிய போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

ஒருபுறம் எஸ்கே படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள போதிலும் கண்ணாடி முன்பு மீசை இல்லாமல் கிளீன் ஷேவுடன் சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.



 


Advertisement

Advertisement