• Jan 19 2025

மாயாவின் சகோதரிகளை பார்த்துள்ளீர்களா? எவ்வளவு அழகான குடும்பம்! அரிதான போட்டோ இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மக்களின் எதிர்பார்ப்போடு தொடங்கி தற்போது 70 நாட்களைக்  கடந்துள்ளது பிக்பாஸ் சீசன் 7. 


இதன் ஆரம்பத்தில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 

மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான்.


குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா. மேலும், லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில்,  பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு விறுவிறுப்பாக விளையாடி வரும் மாயாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement