• Oct 15 2026

நாஞ்சில் விஜயன் உண்மையிலேயே மனைவியை பிரிந்துவிட்டாரா? லீக்கான போட்டோவால் ரசிகர்கள் ஷாக்

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் நாஞ்சில் விஜயனின் திருமண வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

திருநங்கை வைஷூ, நாஞ்சில் விஜயன் தன்னுடன் நெருங்கிப் பழகி தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த காலத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டை நாஞ்சில் விஜயன் மறுத்து வந்தார். இதனிடையே, அவரது குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், மனைவியைப் பிரிந்து அவர் தனியாக வசித்து வருவதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியாகின.


அதாவது, நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டதாகவும், மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியது. சர்ச்சை அதிகரித்த நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த பதிவை அவர் நீக்கினார்.

இந்நிலையில், நாஞ்சில் விஜயனின் 3-வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், அவர் உண்மையிலேயே மனைவியை பிரிந்து வாழ்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Advertisement

Advertisement