• Oct 15 2026

விஷாலின் கேரியரை மாற்றிய ‘இரும்புத்திரை’… முதலில் யாருக்கு கிடைத்த வாய்ப்புத் தெரியுமா.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

விஷால், சமந்தா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘இரும்புத்திரை’. டிஜிட்டல் உலகில் நடைபெறும் மோசடிகள், தனிநபர் தகவல்கள் திருடப்படுவது, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம், வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தின் வித்தியாசமான கதைக்களமும், சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வு கருத்துகளும் கவனம் பெற்றன.

இந்நிலையில், ‘இரும்புத்திரை’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பகிர்ந்திருந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இப்படத்தின் கதையை முதலில் நடிகர் மாதவனிடம் இயக்குநர் கூறியதாக தெரிவித்துள்ளார்.


கதையை கேட்ட மாதவனுக்கு முதல் பாதி மிகவும் பிடித்திருந்ததாகவும், ஆனால் இரண்டாம் பாதி அவருக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என்றும் கூறினார்.

இதன் காரணமாக மாதவன் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும், பின்னர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் இணைந்ததாகவும் பி.எஸ்.மித்ரன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு உருவான ‘இரும்புத்திரை’ விஷாலின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement