• Dec 04 2024

பயில்வானுக்கு மனநோயா? திடீரென வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்த வெங்கடேஷ் பட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் செப் வெங்கடேஷ் பட். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசனின் வரை நடுவராக பணிபுரிந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்தாவது சீசன் ஆரம்பத்திலேயே இதிலிருந்து விலகி இருந்தார்.

விஜய் டிவி மற்றும் மீடியா மேஷனுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து விலகி சன் டிவிக்கு தாவி சென்றார். 

ஆனாலும் தனக்கும் விஜய் டிவிக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. என்னை வளர்த்து விட்டது மீடியா மேஷன் தான் அது எங்க போனாலும் நானும் அங்கே செல்வேன் என காரணம் ஒன்றையும் கூறியிருந்தார்.

அதன்படி சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் புதுப்புது ட்ரிக்ஸ்களை போலோ பண்ணி வந்தார் வெங்கடேஷ் பட். இந்த நிகழ்ச்சியும் குக் வித் கோமாளி சீசன் 5 நிறைவடையும் போது முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டா  பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி சர்ச்சை பேச்சுக்களை பேசியதாகவும், பாவம் அவருக்கு மனநிலை சரியில்லை போல அல்லது அவர் வருமானத்திற்காக செய்கின்றார் எனவே அவருக்கு யாரும் திட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதாவது தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பற்றி சர்ச்சையான கருத்துக்களை எவ்வித ஆதாரமும் இன்றி வெளியிட்டு வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது வெங்கடேஷ் பற்றி சர்ச்சையான கருத்துக்களை பேசி உள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் திட்டி கமெண்ட் போட்டுள்ளார்கள்.

தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வெங்கடேஷ்,  அவர் இவ்வாறான விடயங்களை ஒன்று பணத்துக்காக பண்ண வேண்டும் இல்லை என்றால் மன நோயால் பாதிக்கப்பட்டு பண்ண வேண்டும். இதனால் யாரும் அவருக்கு திட்ட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement