• Dec 07 2024

செழியனை வைத்து காய் நகர்த்தும் கோபி.. பாக்கியாவுக்கு தரமான பதிலடி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செழியன் கோபி கிச்சனுக்கு சென்று அங்கு தனக்கு மனது சரியில்லை என்று சொல்லுகின்றார். இதனால் கோபி சரி இரு என்று சொல்லி அவருக்கு சாண்ட்விச் சாப்பிட கொடுக்கின்றார். அந்த நேரத்தில் செழியன் பியர் எடுத்து குடிக்கிறார்.

இதன்போது கோபி செடியனை சந்தோஷப்படுத்துவதற்காக ஆடிப்பாடி சந்தோஷமாக இருக்கின்றார். அதன் பின்பு செழியன் நன்றாக குடித்த பின் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். வீட்டுக்கு போனதும் தான் போகின்றேன் என்று செழியன் சொல்லவும் இல்லை நானே கொண்டு போய் விடுகிறேன் என்று அவரை பிடித்துக் கொண்டு செல்லுகின்றார். கோபியை செழியன் நல்ல அப்பா என மொச்சுகிறார்.

இதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்து நிற்க, ஜெனி செழியனிடம் குடிச்சு இருக்கியா என திட்டுகின்றார். ஆனாலும் இப்ப எதுவும் பேச வேண்டாம் என்று கோபி செழியனை ரூமில் தூங்க வைக்கின்றார்.


இதை தொடர்ந்து கோபி கீழே இறங்கி வரும் போது பாக்கியா அவரை நிறுத்தி, பிள்ளை தப்பு செஞ்சா திருத்தனும் உங்களைப் போல ஆக்க போறீங்களா என்று சரமாரியாக கேள்வி கேட்க, செழியன் என்னால் குடிக்கவில்லை இந்த வீட்டால் தான் குடிக்கிறான். இந்த வீட்ல அவனுக்கு நிம்மதி இல்லை. அதனால் தான் என்னை தேடி வாரான் என்று சொல்கின்றார்.

அதற்கு பாக்கியா நாங்களும் இன்னும் மாமா இறந்த சோகத்தில் இருந்து வெளியே வரல, எங்களுக்கும் ஆயிரம் கவலை இருக்கு அதனால நாங்களும் குடிக்கிறோமா? என்று பேச, கோபி அவற்றை எதுவும் கேட்காமல் ஈஸ்வரிக்கும் பதிலடி கொடுத்து செல்கிறார். இதனால் ஈஸ்வரியயும் பேச முடியாமல் விரக்தியில் நிக்கிறார். 

Advertisement

Advertisement