• Sep 02 2025

இந்தப் படம் நிச்சயமா ஜெயிக்கும்..! – "பிளாக்மெயில்" குறித்து மனம் திறந்த G.V. பிரகாஷ்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இசைக் கலைஞராக மட்டுமின்றி, கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்தவர் G.V. பிரகாஷ். ‘டார்லிங்’, ‘கிங்ஸ்டன்’ ஆகிய படங்களில் கொடுத்த இசை மற்றும் நடிப்பு அவரை முழுமையான திரைப்பட கலைஞனாக மாற்றியிருந்தது.


இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் G.V. பிரகாஷ் தனது மனம் திறந்து பேசினார்.

அந்த நேர்காணலில், பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது G.V. பிரகாஷ், “பிளாக்மெயில் படம் ரொம்பவே interesting-ஆ இருக்கு. நிச்சயமாக ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். இது ஒரு dark comedy crime thriller மாதிரியான புது ட்ராக்கில் உருவான படம்.” என்றார். 


பிளாக்மெயில் படத்தை இயக்கியுள்ளவர் மு. மாறன். இது ஒரு குற்றம் சார்ந்த த்ரில்லராக இருக்கின்றது, ஆனால் அதில் கடினமான மனநிலைகள், துரோக உணர்வுகள், மற்றும் அழுத்தமான நகைச்சுவை கலந்து கூறப்பட்டுள்ளது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட்  1ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement