• Aug 12 2025

திரையுலகின் மாபெரும் கலைஞருக்கு இன்று பிறந்தநாள்..! வைரலான இன்ஸ்டா பதிவுகள்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள், மாறுபட்ட நடிப்புகள் மற்றும் சாகசமான கதைகளுடன் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இன்று, ஜூலை 20 அன்று, அவர் தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


இவ்வாறு டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்திலும் ரசிகர்கள் வாழ்த்து மழையைக் கொட்டுகிறார்கள். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தன்னை உறுதி செய்தவர் எஸ்.ஜே. சூர்யா. 


அத்தகைய கலைஞரின் பிறந்தநாளை திரையுலகமே விமர்சையாக கொண்டாடுகிறது. மேலும்,  எஸ்.ஜே. சூர்யா தற்பொழுது கில்லர் எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement