• Jan 18 2025

ஈஸ்வரிக்கு செக் வைத்த கோபி.. ராமமூர்த்தி எடுத்த விபரீத முடிவு! உடைந்து போன பாக்கியா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், நீதிமன்றத்தில் நிற்கும் பாக்யா, ஈஸ்வரி எதுவும் செய்யவில்லை என அவருக்காக வாதாடுகிறார். ஆனாலும் அவருடைய பேச்சு செல்லவில்லை.

அதன் பின்பு கோபியை வக்கீல் விசாரிக்க, கோபியும் நான் அந்த நேரத்தில் இல்லை எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்லிவிடுகிறார். அத்துடன் ஈஸ்வரி உங்கள் குழந்தையை அழிக்க சொன்னதா எனக்  கேட்கவும், எனக்கு வயசு ஆகிட்டு என் மேல இருக்கிற பாசத்துல அப்படி சொல்லிவிட்டார் என உளறி விடுகிறார் கோபி.

இதனால் இந்த வழக்கை ஒத்தி வைக்கிறார் நீதிபதி. மேலும் ஈஸ்வரியை நீதிமன்ற தடுப்பு காவில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கின்றார். 

அதன்பின்பு பாக்கியா கமலா, ராதிகாவை சந்தித்து நீங்க இப்படி பண்ணுவீங்க என்று கொஞ்சமும் நினைக்கவே இல்ல என ராதிகாவுக்கு பேசுகின்றார். மேலும் சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்கிட்டீங்க என கூறிக் கொண்டிருக்கும்போது எழில் வந்து பாக்கியாவை அழைத்துச் செல்கிறார்.


இதைத் தொடர்ந்து ஈஸ்வரி பாக்கியாவை பார்க்க வேண்டும் என கூறவும், ஈஸ்வரியை பார்க்கச் செல்கிறார் பாக்கியா. இதன் போது ஈஸ்வரி பாக்யாவை கட்டிப்பிடித்து அழ, உங்களை எப்படியும் நான் வெளியே எடுத்து விடுவேன் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றார் பாக்கியா.

இதை அடுத்து வீட்டுக்கு போனதும் எல்லாரும் அழுது கொண்டிருக்க, ஈஸ்வரி இல்லாட்டி நானும் இருக்க மாட்டேன் ஏதாவது பண்ணிடுவேன் என ராமமூர்த்தியும் ரொம்பவும் உடைந்து அழுகிறார். ஆனாலும் எழில் அவருக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கை கொடுக்கின்றார். அத்துடன் கோபி வாய மூடிட்டு இருந்திருந்தால் இன்றைய தினம் பாட்டிக்கு ஜாமீன் கிடைத்திருக்கும் எல்லாத்தையும் கெடுத்துவிட்டார் என எழில் கோபப்படுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement