• Mar 31 2025

AK ஒரு Red dragon கெத்தாக வெளியாகிய "good bad ugly " திரைப்பட Teaser...!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,பிரபு ,பிரசன்னா ,யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி எதிர்பார்ப்பினை அதிகரித்த நிலையில் தற்போது இப் படத்தின் Teaser வெளியாகியுள்ளது.


Mythri Movie Makers இப் படத்தினை தயாரித்துள்ளதுடன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப் படத்தில் அஜித் 3 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஒரு சில இணையத்தளங்களில் படத்தின் கதை ஜாடை மாடையாக கசிந்தும் உள்ளது. 


அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறாமையினால் அதன் தாக்கம் இந்த படத்திற்கும் இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. இருப்பினும் இந்த படத்தின்  Teaser  செம அதிரடியாக உள்ளது. அஜித் மிகவும் மாஸாக நடித்துள்ளார். இந்த அப்டேட் தற்போது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. வெளியாகி ஒரு சில நொடிகளில் அதிகபட்ஷ பார்வையாளர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement