• Jan 19 2025

மகனை பார்த்தும் எமோஷனலான ரோகிணி.. எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்ட முத்து, மீனா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து க்ரிஷையும் ரோகிணியின் அம்மாவையும் வீட்டிற்கு வருமாறு அழைக்க, ரோகிணியின் அம்மா அவருக்கு போன் பண்ணி நடந்தவற்றை சொல்கின்றார். ரோகினியும் இதுதான் சான்ஸ் என வருமாறு சொன்னதோடு தான் சொன்ன மாதிரி நடக்குமாறு பிளான் போட்டு கொடுக்கிறார்.

அதன்படி வீட்டிற்கு கிருஷ்ணர் வேடம் போட்டு கிரிஷை மீனா அழைத்து வருகின்றார். இதைப் பார்த்து ரோகினி சந்தோஷப்படுகிறார். அதன் பின்பு மீனா பாட்டு பாடி பூஜைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்க, க்ரிஷ் அங்குள்ளவர்களுக்கு  பொங்கல் கொடுக்க போகின்றார்.

இதன் பொது ரோகிணி அவரை கட்டிப்பிடித்து கொஞ்ச  எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கின்றார்கள். ஆனால் விஜயா அவளுக்குத்தான் கரு கலைந்ததே அதனால் தான் அந்த ஞாபகம் வந்திருக்கும் என்று சொல்ல, ரோகிணியும் ஆமாம் என சொல்லி சமாளிக்கின்றார்.


இதைத் தொடர்ந்து முத்து க்ரிஷுடன்விளையாடிக் கொண்டிருக்க இப்போதுதான் இவன் சந்தோஷமாக இருக்கின்றான். நீ இங்கேயே இருக்கின்றாயா? நாங்கள் உன்னை நல்லா பார்த்துக் கொள்கின்றோம் என்று பேச, ரோகிணி அவருடைய அம்மாவுக்கு கண்ணை காட்டுகின்றார். 

அவருடைய அம்மாவும் வேறு வழியில்லாமல் போதும் நிறுத்துப்பா என்று சொல்லி முத்துவையும் மீனாவையும் அசிங்கப்படுத்துகின்றார். மேலும் நீங்க தத்தெடுப்பதில் எனக்கு விருப்பமே இல்ல. அவளுக்கு அம்மா பாட்டி இருக்கோம். இனிமேல் எங்கள் வீட்டு பக்கமும் வந்துடாதீங்க என்று அவர்களை அசிங்கப்படுத்தி செல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement