தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருந்தது. ஆனாலும் இதன் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றார்கள்.
அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட்பேக் அக்லி படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா இணைந்துள்ளார். இந்த படம் தொடர்பில் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இன்னொரு பக்கம் நேற்றைய தினம் கார், பைக் ரேசிங் நடைபெறும் சீசன்களில் தான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டேன் என அஜித் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதன்படி அக்டோபர் முதல் மார்ச் வரை எந்த படங்களிலும் நடிக்கப் போவதில்லை. ரேசிங் சீசன் முடிந்த பிறகு தான் படங்களில் நடிப்பதற்கு முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அஜித்குமார் உடல் இளைத்த ரகசியத்தைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது அஜித் குமார் 90 நாட்கள் வெந்நீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் இவ்வாறு முயற்சி பண்ண வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!