• Oct 05 2025

ஜெர்மனியை சேர்ந்த சமூக வலைத்தள பிரபலம் பெங்களூரில் கைது..!15 நிமிடங்களில் பின் விடுதலை...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல யூட்யூபரும் சமூக வலைத்தள செயற்பாட்டாளருமான நோய்ல் ரான்பிசன் கடந்த வாரம் பெங்களூரில் சாலையில் வீடியோ படம் பிடித்துக் கொண்டிருந்த போது பொலிஸாரால் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொதுமக்கள் நடமாடும் ஒரு முக்கிய சாலையில் அவரால் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, பொலிஸார் அவரை தற்காலிகமாகக் கைது செய்தனர். பின்னர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோய்லிடம் சுமார் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் போது, அவர் சுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு வந்திருப்பதும், பெங்களூரின் கலாச்சாரம் மற்றும் நகரின் இயல்புகளை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வீடியோ எடுத்திருப்பதும்  தெரியவந்தது. சட்ட ஒழுங்கு மீறல் குற்றம் சுமத்தும் அளவிற்கு இது முக்கியமானது அல்ல என மதித்து, சிறிது அபராதம் விதித்து விடுவித்தனர்.

Advertisement

Advertisement