• Dec 19 2025

காதல் மனைவியுடன் இணைந்து தல தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடிய கவின்- சூப்பர் ஜொடியாக இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு வெளியான ‘சத்ரியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.


 2019ஆம் ஆண்டு நடந்த ‘பிக்பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு கவின் நடித்து வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


மேலும் இவர் அண்மையில் தன்னடைய நெருங்கிய தோழியான மோனிகாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த நிலையில் கவின் தன்னுடைய காதல் மனைவியுடன் இணைந்து திபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement