• Jan 19 2025

கேம் சேஞ்சர், கங்குவா முதல் சம்மு படம் வரை... எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

கங்குவா படத்தின் ஓடிடி உரிமைத்தை அமேசன் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நேற்றைய தினம் நடைபெற்ற அமேசன் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, கங்குவா பட டீசரையும் வெளியிட்டு இருந்தார்.

குறித்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா மட்டுமின்றி விஜய் தேவரகொண்டா, காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி, சமந்தா, கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


அதில் பல படங்கள் மற்றும் வெப் தொடர்களின் அறிமுகத்தை அமேசன் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.


அதன்படி ராம்சரண் நடப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர், காந்தாரா 2,  ஃபேமிலி ஸ்டார்,  நடிகை சமந்தாவின் சிட்டாடல் வெப்சீரிஸ், அனன்யா பாண்டேவின் கால் மீ வே என பல படங்களின் அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு ஓடிடி  ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது அமேசன் பிரைம் நிறுவனம்.

மேலும்,  மிர்ஸாபூர் சீசன் 3 என்ற ரசிகர்களின் பேவரைட் வெப்சீரியலும் விரைவில் வரவுள்ளதாம். தற்போது நெட்பிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோவுக்கு போட்டியாக அமேசன் பிரேம் நிறுவனம் பலத்த அடியெடுத்து வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement