• Jan 19 2025

எனக்கு விஜயுடன் நடிகை ஆசை.. ஏனென்றால் எனது கணவர் விஜய்யின் சாயல் உடையவர்! விருமாண்டி நடிகை பகிர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அபிராமி. 

கேரளாவைச் சேர்ந்த இவர், முதலில் மலையாளத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தோஸ்த், சமுத்திரம்  சார்லி சாப்ளின், சமஸ்தானம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இவரது சினிமா வாழ்வில் இவருக்கு சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் தான். இத் திரைப்படத்தில் திமிரான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். 


இதை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகிய இவர், நீண்ட இடைவெளியின் பின்னர் மாறா என்னும் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.


அதைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  ஆனாலும் 13 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நடிகை அபிராமி, பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.


இந்த நிலையில், தற்போது தனக்கு நடிகர் விஜயுடன் நடிகை ஆசை எனக் கூறிய அபிராமி, அதற்கு காரணம் தனது கணவர் விஜயை போல இருப்பது தான் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு தனது கணவர் விஜயை போல உள்ளார் என அபிராமி கூறியது, சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

Advertisement

Advertisement