பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் நிறைய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. முதலில் அஜித்தின் விடாமுயற்சி இந்த பொங்கல் திகதியை லாக் செய்திருந்த நிலையில் சில காரணங்களினால் ரிலீஸ் தள்ளிபோனது. இதனை அடுத்து உடனே பல திரைப்படங்கள் பொங்கல் ரிலீஸ் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டன. இந்நிலையில் இந்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் புதிய படங்கள் குறித்து பார்ப்போம்.
பொங்கல் ரேசில் முதலாவதாக இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ரிலீஸானது. இதனையடுத்து இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி 12 வருடங்களாக கிடப்பில் இருந்த விஷாலின் "மதகஜராஜா" திரைப்படம் நேற்று ரிலீஸானது. தற்போது வரையில் மக்கள் மத்தியில் இந்த 2 திரைப்படங்களும் நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி-நித்யா மேனன் நடித்த "காதலிக்க நேரமில்லை" திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. அத்தோடு நடிகர் ஆகாஷ் முரளி, நடிகை அதிதி ஷங்கர் நடிப்பில் "நேசிப்பையா" திரைப்படம் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகர் சிபிராஜின் "டென் ஹவஸ்" திரைப்படம், கிஷான் தாஸின்" தருணம்" ஆகிய திரைப்படங்கள் 14 திகதியை லாக் செய்து ரிலீசாக உள்ளது.
மேலும் பொங்கல் வரிசையில் நடிகர் மணிகண்டனின் "குடும்பஸ்தன்" , அஜித்குமாரின் விடாமுயற்சி, சண்முகப்பாண்டியனின் "படைத்தலைவன்" ஆகிய திரைப்படங்கள் முறையே 24,26,30 ஆகிய திகதிகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் ரசிகர்களுக்கு சரவெடியான பொங்கல் கொண்டாட்டத்தினை கொடுக்கவுள்ளது. மேலும் சூர்யாவின் வாடிவாசல் அப்டேட் , ரஜனிகாந்தின் ஜெயிலர் 2 டைட்டில் ப்ரோமோ , சிவகார்த்திகேயனின் Sk23 டைட்டில் டீசர் என்பனவும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கிறார்கள்
Listen News!