1984 ஆம் ஆண்டு முதல் ஹீரோவாக பயணித்து வரும் மெகா ஹிட் நடிகர் தன் பாலையா. இவர் டோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக காணப்பட்ட போதும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தனது திரையுலக வாழ்க்கையில் 50 வருடங்களை கடந்துள்ளார் பாலையா. தற்போதும் ஹீரோவாக நடித்து கலக்கி வருகின்றார் . பாலையா நடிப்பில் டக்கு மகாராஜ் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த படத்தில் அவர் ஹீரோயின் உடன் ஆடிய நடனம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதில் அவர் ஹீரோயினுக்கு பின்னால் தட்டுவது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி மகளீர் சங்கம் வரை கொந்தளிக்க காரணமாக அமைந்தது.
அதன் பின்பும் பாலையா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அருகில் இருந்த ஹீரோயினை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக அவர் பண்ணிய சேட்டையும் இணையத்தில் வைரலானது..
இந்த நிலையில், நடிகர் பாலையாவின் மற்றும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அதே நடிகையுடன் குத்தாட்டம் போட்ட பாலையாவின் டான்ஸ் ஸ்டெப் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது குறித்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. குறித்த நடிகைக்கு 30 வயதாகும் நிலையில் பாலையாவுக்கு 64 வயதாகிறது. இதனால் இந்த வயதில் இவருக்கு இந்த ஆட்டம் தேவையா? ரஜினிகாந்திற்கு இருக்கும் பக்குவம் கூட பாலையாவுக்கு இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
Success Party ‘Kuthu’ Dance by Balayyah & Urvashi 🕺#DaakuMaharaaj
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 13, 2025
pic.twitter.com/F6ORUM1OPo
Listen News!