• Apr 01 2025

ஜெயிலர்-2 ப்ரோமோவில் ரஜனி இல்லையா! BTS வீடியோவால் பதிலடி கொடுத்த படக்குழு

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான ஜெயிலர் 2 படம் குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுவருகிறது. தற்போது ப்ரோமோவின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  


கடந்த 2022ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டர் ரஜினிகாந்த், மோகன் லால், சிவ்ராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி மாஸான காட்சிகளும் அதற்கு ஏற்ற பின்னணி இசையுடனும் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படம் தன ஜெயிலர்.  இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயலர்-2 உருவாகி வருகிறது. 

 

கடந்த ஆண்டில் சூப்பர் ஸ்டாரின் 74வது பிறந்த நாளில் ஜெயிலர் 2 குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயிலர் 2 குறித்த அறிவிப்புகள் தள்ளிப்போனது. ஆனால் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெயிலர் 2 ப்ரோமோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. 


இந்நிலையில் வெளியாகிய ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுவரும்நிலையில். இதில் ரஜினிகாந்துக்கு பதிலாக வேறு யாரையோ டூப் போடச் சொல்லி ப்ரோமோவை எடுத்துள்ளார்கள் என சில விமர்சகர்கள் எழுந்தன. தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ப்ரோமோ மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படு மாஸாக உருவாகிய ப்ரோமோவின் BTS வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement