பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் செந்திலைப் பார்த்து நேற்று இந்த நேரம் வீடு எவ்வளவு சந்தோசமா இருந்திச்சு இண்டைக்கு எல்லாருமே சோகமா இருக்கிறார்கள் என்று சொல்லுறார். பின் கோமதி சரவணனை காணேல என்று தேடுறார். இதனை அடுத்து கதிர் செந்தில் கிட்ட அண்ண போன் எடுக்கல என்று சொல்லுறார். அதைக் கேட்ட செந்தில் எங்க போய்ட்டாரோ தெரியல என்று சொல்லிட்டு தேடிப் பார்ப்போம் என்கிறார்.
அந்த நேரம் பார்த்து சரவணன் அங்க வாறார். பின் கோமதி சரவணனை சாப்பிட சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் நாங்க அண்ணனை பார்த்துக் கொள்ளுறோம் என்கிறார். இதனை அடுத்து மயில் சரவணனை பார்த்து நமக்கு மட்டும் ஏன் இப்புடி ஆகுது என்று சொல்லிட்டு கட்டிப் பிடிச்சு அழுகுறார். ஆனால் சரவணன் மயிலோட கையை உதறிட்டு தள்ளிப் போய் நிற்கிறார்.
பின் சரவணன் மயிலைப் பார்த்து நீ என்னை ஏமாத்துறது என்ன புதுசா என்று கேட்கிறார். மேலும் உன்ர உண்மையான முகம் தெரிஞ்சா பிறகும் உன்ன நம்பினது தான் நான் செய்த பிழை என்கிறார். அதைத் தொடர்ந்து மயில் சரவணன் கிட்ட குழந்தை விஷயத்தில போய் யாராவது பொய் சொல்லுவாங்களா என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் நீ இந்த விசயத்திலையும் பொய் சொல்லுவ என்கிறார்.
இதனைத் தொடர்ந்து குமாரவேல் அரசியை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில மயில் சத்தியமா பொய் சொல்லேல மாமா என்கிறார். அதுக்கு சரவணன் நீ கிளம்பி வீட்ட போ என்று சொல்லுறார். மேலும் இனிமேல் நீ யாரோ நான் யாரோ என்று கோபமாகச் சொல்லுறார் சரவணன். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!