• Mar 12 2025

கின்னஸ் சாதனை படைத்த நடிகை - ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக்கலைஞரும் நடிகருமாக விளங்குபவரே நடிகை திவ்யா உன்னி. இவர் தமிழ் , மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் பூக்கலம் வருவாய் , ஓ பேபி மற்றும் கல்யாண செளகந்திகம் போன்ற படங்கள் அவருக்கு அதிகளவான வெற்றியை அளித்ததுள்ளது .


தற்போது நடிகை திவ்யா பற்றி தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் திவ்யா கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 11600 பரத நாட்டிய கலைஞர்களை ஒன்றிணைத்து எட்டு நிமிட பாடல் ஒன்றுக்கு அழகாக நடனமாடி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரைக்கும் யாரும் இப்படி ஒரு நடனத்தை ஆடி இருக்கவில்லை என்றே கூறவேண்டும். அத்துடன் அந்த நடனத்தை பார்வையிட்டவர்கள் நடிகை திவ்யா கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். இது அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement