பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் இயக்கத்தில் உருவான படமே காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் ஜோகி பாபு , வினய் போன்றவர்கள் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஜனவரி 14ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்திருந்தனர். அத்துடன் அதிகளவான வசூலையும் இயக்குநர்கள் இந்தப் படத்தின் மூலம் பெற்றிருந்தனர்.
தற்போது ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காதலிக்க நேரமில்லை படத்தினை NETFLIC OTT தளத்தில் பிப்ரவரி மாதம் 11ம் திகதி வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Listen News!