இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,அர்ஜுன்,ரெஜினா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.முதல் பகுதி காதல் விவாகரத்து அடுத்த பகுதி ஆக்சன் என ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று முதல் காட்சியினை ரசிகர்களுடன் இணைந்து இயக்குநர் மகிழ்திருமேனி ,திரிஷா ,ஆரவ் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். இரண்டு வருடங்களின் பின்னர் அஜித் படம் வெளியாகியுள்ளதால் அஜித்தை பெரிய திரையில் பார்ப்பதற்காகவே ரசிகர் கூட்டம் திரண்டுள்ளது.
இடைக்கிடையில் ஒரு சில average விமர்சனங்கள் தோன்றினாலும் ஒட்டுமொத்தமாக நல்ல கமெண்ட்கள் குவிந்து வருகின்றது.இந்த நிலையில் தியேட்டரிற்கு வெளியில் மகிழ் திருமேனி வழங்கிய பேட்டியில் "தமிழக மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ;டப்பிங் அப்போ அஜித் சார் பாத்தார் அவர் ரொம்ப happy "என கூறியுள்ளார்.
மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் again இந்த காம்போ எப்போ சார் எதிர்பார்க்கலாம் என கேட்டதற்கு "சார் சொல்லுவார்" என சிரித்தபடி கூறி நழுவியுள்ளார்.
Listen News!