• Oct 12 2025

நடிகர் விமல்- சூரிக்கிடையில் இப்படி ஒரு நட்பா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான விமல், தனது மாறுபட்ட நடிப்பு மற்றும் ஹியூமர் கலந்த கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, அவர் மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர் இன்று வெளியிடப்படவிருக்கிறது என தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன் சிறப்பம் என்னவென்றால், நகைச்சுவை நடிகராகவும் தற்போது ஹீரோவாகவும் மாறியுள்ள சூரி, தனது சமூக வலைத்தளபக்கங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் நடிகர் சூரி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “மருதம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் நண்பன் விமலின் புதிய படத்தின் First Look போஸ்டரை, இன்று மாலை 5:10 மணிக்கு வெளியிடுகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இந்த படத்துக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.


இத்தகவல் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரியின் இந்த அறிவிப்புடன், “#Vimal #FirstLook #MarudhamProductions” போன்ற ஹாஷ்டாக்களும் ட்ரெண்டாகி வருகின்றன.

Advertisement

Advertisement