• Jan 19 2025

சினிமா துறையில் இருந்து நஸ்ரியா விலக என்ன காரணம் தெரியுமா? சோகத்தில் ரசிகர்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நஸ்ரியா நஷீம் . இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருகின்றார் இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம். சொல்ல போனால் ஒரு  ரசிகர் பட்டாளமே இருக்கு .தனது அழகினாலும் குழந்தைத்தனத்தாலும் மக்கள் மனதை கவர்ந்தவர் . 

நஸ்ரியா நஷீம் அவருடைய  சினிமா வாழ்க்கையை எப்பிடி ஆரம்பித்தார், அவருடை நிஜ  வாழ்க்கை வரலாறு குறித்து பார்க்கலாம் வாங்க ,  நஸ்ரியா நஷீம் 1994ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி கேரளா மாநிலத்தில் பிறந்தவங்க. இவங்க ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவங் . நஸ்ரியாவுக்கு ஒரு அண்ணாவும் இருக்கிறார் . இவங்க வளர்ந்தது ,படிச்சது எல்லாமே டுபாயில் தான் . 


நஸ்ரியாவுக்கு சின்ன வயதிலேயே நடிப்பில மிகவும் ஆர்வம் இருந்தது.  குழந்தை நட்சத்திரமாக மம்முட்டியினுடைய திரைப்படத்தில் அறிமுகமானார் . அப்பிடியே நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் . இதனாலயே ஒழுங்கா காலேஜ் , ஸ்கூல் படிப்புகள் ஒழுங்கா முடிக்கவில்லை . அதனாலேயே  இவருக்கு படிப்பு சுத்தமா வரவில்லை . 


அம்மா , அப்பாவின் அனுமதியோடு நடிக்க ஆரம்பித்த இவர் எப்பிடி வேணாலும் நடிக்கலாம் , கிளமரா கூட நடிக்கலாம் என்று இல்லாமல் ஒரு படம் நடித்தாலும் ஒழுங்கா உருப்படியா நடிக்கனும் என்று நினைத்தார் . எனது திறமைக்கு ஏற்ற மாதிரி நல்ல ரோல் பண்ணனும் என்ற எண்ணத்துடன் தான் சினிமாவுக்குள்ளயே வந்தார் . 


தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் இந்த படத்தில் பெரும் வெற்றியையும் நல்ல வரவேற்பையும் பெற்ற நஸ்ரியா இந்த படம் மூலமே பல ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் . அதனை தொடர்ந்து தமிழில் நையாண்டி படமும்  அவர் நடிப்பில் வெளியானது . இந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது . 


பல மலையால திரைப்படமும் நடித்து வெற்றியை ருசிபார்த்தவர் . நையாண்டி படம் மூலம் ஒரு சர்ச்சைக்குள் சிக்கினார் . அதாவது இவர் தனுஷ் உடன் ரொமேன்டிக்கா நடிக்காத ஒரு சில சீன்ஸ்ச படத்தில சேர்த்து இருக்கிறாங்க என்று தானே ஒரு கேஸ் போட்டு அந்த நெருக்கமான சீன்ஸ்ச இல்லாம ஆக்கினாங்க . 


நையாண்டி படம் மூலமாக வந்த ஒரு சில பிரச்ச்னையினால் தமிழ் படங்கள் நடிக்கமா கொஞ்சம் விலகி இருந்தார் .ஐந்து திரைப்படங்களை தவிர தமிழில் வேறு திரைப்படங்கள் இன்னுமே நடிக்கவே இல்லை . தமிழ் சினிமாவை விட்டு விலகினார் நஸ்ரியா நஷீம் அவர்கள் .


Advertisement

Advertisement