• Jan 19 2025

ஒருவர் மரணத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்..! 'நாதஸ்வரம்' சீரியல் நடிகையின் உருக்கமான பேட்டி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

'நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா, வாணி ராணி' எனப் பல சீரியல்களிலும் நடித்துப் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

இவருக்கும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருக்கும்  திருமணம் நடந்தது. நடிகை ஸ்ருதியும் தனது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது சமூகவலைதளங்களில் ரிலீஸ் பதிவிட்டு வந்தார்.

எனினும், அவரது கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில் இவரின் இறப்பு பலரிற்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

உடற்பயிற்சி நிலையத்தில் அரவிந்த் வழக்கம் போல வொர்க் அவுட் செய்யும் போதே, திடீரென மயங்கியதாகவும் அதன் பிறகே அவர் இறந்ததாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் அரவிந்தின் மரணத்திற்கு பிறகு முதன் முறையாக சுருதி சண்முகப்பிரியா பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி, அவர் கூறுகையில், 

நான் எங்கு சென்றாலும் அரவிந்துடன் இருக்கும் ஒரு சிறிய அளவிலான புகைப்படத்தை கையோடு எடுத்துச் செல்வேன். அவருக்கு உடம்பு இல்லை என்றாலும், அவருடைய ஆத்மா இப்போதும் என்னை சுற்றியே இருக்கும். 


அவர் இறந்த சமயத்தில் பல வதந்திகள் வந்தன. அதை நிறுத்தவே அரவிந்த் இறந்து இரண்டாம் நாளே நான் ஒரு வீடியோ போஸ்ட் பண்ணியிருந்தேன் என்றும் சுருதி கூறினார்.

அதில், உங்களுக்கு என்ன மாதிரியான லைஃப் ஸ்டைல் பிடிக்குதோ அதன் படியே வாழுங்கள். தேவையில்லாமல் ஒருவர் மரணத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.

மேலும், அவர் இறந்த சமயம் எனக்கு மிகவும் உதவியது யோகாவும் தியானமும்தான். நிறைய புத்தகங்களை படிக்கிறேன். நிறைய இடங்களுக்கு டிராவல் செய்கிறேன். என்னால் மற்றவர்களுக்கு எதிர்மறையான உணர்வுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். 

அரவிந்த் என்னிடம் நிறைய நேர்மறையான கருத்துக்களையே விட்டு சென்றிருக்கிறார். அதை மட்டுமே எடுத்து நான் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றும் சுருதி கூறினார்.

Advertisement

Advertisement