• Apr 16 2025

"96" பாகம்2 கதையை கேட்டதற்கே தங்கச் சங்கிலி...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதலை மையமாகக் கொண்டு வெளிவந்த '96' திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படம். இதில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இப்போது 96 படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளது என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'96' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவிருப்பது பிரபல தயாரிப்பாளர் ஐசரி K. கணேஷ் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இத்தயாரிப்பாளர் இயக்குநர் பிரேமிடம் கதை கேட்டவுடனேயே இந்தப் படத்தை உடனே தயாரிக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார். மேலும் இயக்குநர் பிரேமின் கதையை கேட்டவுடனேயே இது ஒரு ஹிட் கொடுக்கும் படம் என நம்பிக்கையாக உள்ளார். 


இதனால் மறுநாளே பிரேமை அழைத்து 5 பவுன் சங்கிலியை பரிசாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. '96' படத்தில் ராமச்சந்திரன் மற்றும் ஜனனி ஆகியோரின் காதல் கதை ரசிகர்கள் மனதை தொட்டது. இதன் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும்? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா மீண்டும் இணையவேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement