தமிழ் சினிமாவில் 90கள் முதல் 2000களின் தொடக்கம் வரை தனது அழகு, நடிப்பு மற்றும் நடன திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை சிம்ரன், தற்போது மீண்டும் ஒருமுறை இணையத்தை கலக்கும் வகையில் இலங்கையில் வலம் வருகிறார்.
தற்பொழுது, ஒரு தனியார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிம்ரன் இலங்கை சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலாக பரவி ரசிகர்கள் மற்றும் செய்தி ஊடகங்களிடையே அதிரடியான கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் சிம்ரனை விமான நிலையத்தில் வைத்து ரசிகர்கள் மலர் கொடுத்து அமோக வரவேற்பளித்திருந்த காட்சிகளும் பதிவாகி இருந்தன.. அத்துடன் இலங்கை ரசிகர்கள் அனைவரும் சிம்ரனை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் குதூகலித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!