• Jan 16 2026

"பராசக்தி" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், ரசிகர்களின் மனங்களை கவரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “பராசக்தி” திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இந்த படம் குறித்து ஒரு புதிய மற்றும் உற்சாகமான அப்டேட் வெளியாகியுள்ளது.  அதாவது, படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாக உள்ளது என படக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத்தகவல் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டது. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் இந்த அப்டேட்டை பகிர்ந்ததுடன், ரசிகர்களுக்கு இன்னும் ஒரு அதிரடியான தகவலையும் கொடுத்துள்ளார். அதாவது, பாடகர்கள் குறித்த தகவலை விரைவில் குறிப்பிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


சிவகார்த்திகேயன் தனது கேரியரில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அத்தகைய நடிகர் புதிய திரைப்படமான “பராசக்தி” மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லை அடையவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement