• Nov 04 2025

உலக கோப்பையை வென்ற வீராங்கனைகளை பாராட்டிய ரஜினி... வைரலான எக்ஸ் தளப்பதிவு.!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக மேடையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில் அதிரடியான வெற்றியைப் பெற்று, நாட்டை பெருமைப்படுத்தியுள்ளது.


இந்த அசாதாரண சாதனைக்குப் பிறகு, இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதில், தமிழ் சினிமாவின் திலகம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்த வாழ்த்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 

ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் தனது உணர்ச்சிகரமான வாழ்த்தை பகிர்ந்திருந்தார். அதாவது, “மகளிர் உலக கோப்பை வென்று தேசிய கொடியை உலகம் முழுவதும் ஏந்திச் சென்று அடுத்து வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளித்துள்ளனர்." எனக் குறிப்பிட்டுள்ளார் ரஜினி காந்த். 


இந்த பதிவு வெளிவந்த சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரசிகர்கள் தற்பொழுது இதனை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் இந்தப் பதிவுக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் #Rajinikanth மற்றும் #WomensWorldCup2025 என்ற ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது. 

Advertisement

Advertisement