• Apr 21 2025

அள்ளிக்கொட்டும் புது வருட அப்டேட்கள்! தனுஷின் ராயன் படதின் அடுத்த அப்டேட் இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தவிர்க்க முடியாத அருமையான நடிகர் தனுஷ் ஆவார். தமிழில் தொடங்கி ஹிந்தி , தெலுங்கு , மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்தது மட்டும் இன்றி ஹாலிவுட் திரைப்படங்களில் கூட தனது திறமையை நிரூபித்தவர் தனுஷ் .


துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகிய நடிகர் தனுஷ் ஆவார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது எனலாம். இந்த நிலையிலேயே இவரது இயக்கத்தில் இவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.


கலாநிதி மாறன் தயாரிப்பில் தனுஷின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ராயன் ஆகும். குறித்த படத்திற்கு  ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதோடு எஸ். ஏ சூர்யா , சந்தீப் குமார்,காளிதாஸ் ஜெயராம் , நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர் . இந்த நிலையில் குறித்த படத்தின் 1 சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement