• Apr 30 2024

தளபதி வாக்கு போட சொல்லுறாரா? விஜய்யின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு இப்படியொரு மீனிங் இருக்கா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர்  விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் நடைபெற்று வருகிறது.

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான படங்களில் லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியில் சற்று சரிந்து இருந்தாலும், லியோ படம் வசூலில் சூப்பர் ஹிட்டானது.

லியோ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இதை தொடர்ந்து விஜயின் 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்புகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் தான் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தையும் அதிகார்வபூர்வமாக ஆரம்பித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரை வைத்து அதிரடியான திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.


இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்றைய தினம்  GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது.

குறித்த பாடலை விஜய் பாட, மதன் கார்க்கி எழுதி உள்ளார். யுவன் இசையமைத்து உள்ளார். மேலும், விஜயின் அரசியல் வருகையும் இந்த பாட்டில் சுட்டிக் காட்டப்படுவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

இதேவேளை, குறித்த பாடல் விசில் போடு என ஆரம்பிப்பதால் அதனை வாக்கு போட சொல்லி மறைமுக கருத்து இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த  ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல், 


Advertisement

Advertisement

Advertisement