மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மோகன்லால் மற்றும் தெறிக்கவைக்கும் இயக்குநர் பிரித்விராஜ் இணைந்து நடிக்கும் ‘எம்புரான்’ திரைப்படம் தற்பொழுது பாக்ஸ் ஆபிஸில் முதன்மை பெறுவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்பொழுது டிக்கெட் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள்ளேயே பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. இதனை பார்த்த சினிமா ஆர்வலர்கள் இந்தளவுக்கு மலையாள திரையுலகில் இது வரைக்கும் எந்தப் படமும் சாதனை படைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மோகன்லால், மலையாள சினிமாவின் மாஸ் மற்றும் ஆக்சன் ஹீரோவாக உள்ளவர். அவர் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் ஒரு தரமான திரில்லர் படமாக காணப்பட்டது. அந்த வெற்றிக்கு பின்பு, அதே கூட்டணியில் எடுக்கப்பட்ட ‘எம்புரான்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Listen News!