தமிழ் சினிமாவின் இசைத் தெய்வம் என அழைக்கப்படும் இளையராஜா தனது சங்கீதத் திறமையால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி ரசிகர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியவர்.
சமீபத்தில் சிம்பொனி இசை நிகழ்ச்சி மூலம் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இளையராஜாவுக்கு, தற்போது இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல் கலை உலகிலும், ரசிகர்களிடையிலும் மிகப்பெரிய உற்சாகத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதினை அப்துல்கலாம் மற்றும் எம்.ஜி.ஆர் எனப் பலரும் வாங்கியிருந்த நிலையில் தற்பொழுது இளையராஜா இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கின்றார் என்பது தமிழ் மக்கள் மற்றும் இசை ரசிகர்களுக்குப் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
பாரத ரத்னா என்பது இந்தியாவின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது என்பதால், இளையராஜா இந்த விருதைப் பெறும் நாள் தமிழக மக்களுக்கு ஒரு திருநாளாக மாறிவிடும் எனச் சிலர் கூறியுள்ளனர்.
Listen News!