தமிழ் சினிமாவில் கலாச்சாரத்தை இணைத்துக் காட்டும் நடிகரான சூர்யா, தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளார். ‘வாடிவாசல்’ படத்தின் வேலைகள் முடிவடைவதற்குள்ளேயே, அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே பரவத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில், ‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி சூர்யாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி' திரைப்படம், தனுஷின் நடிப்பில் உருவாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மாணவர்களின் கல்வி குறித்து பேசும் திரைப்படமாகவும், அதே நேரத்தில் உணர்ச்சி பூர்வமான காதல் கதையாகவும் அமைந்திருந்தது.
இப்படத்திற்குப் பிறகு, வெங்கி அட்லூரி தனது அடுத்த படத்தில் சூர்யாவை இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தப் படம் குறித்து வெளியான தகவலின் படி, இப்படத்தில் ஹீரோயினியாக மமிதா பைஜூவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் சம்மதிக்காவிட்டால் அனுபமா பரமேஸ்வரனிடம் கேட்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் வெளியான ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான மமிதா பைஜூ, இப்போது தமிழ் தயாரிப்பாளர்களின் படங்களில் முன்னணியில் உள்ளார். இந்நிலையில், சூர்யாவுடன் இணையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருப்பது, அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Listen News!