• Jan 19 2025

வாழைக்காய் பஜ்ஜி போல இழுக்காதீங்க.. நறுக்கென்னு அட்வைஸ் பண்ணிய பப்ளிக்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமாக காணப்படுவது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை இதுவரையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இவருக்காகவே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது கமலஹாசன் இல்லை என்னும் போது அந்த இடத்தை நிரப்புவதற்காக விஜய் சேதுபதி தயாராகி உள்ளார்.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களும் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனாலும் கடைசியாக இடம்பெற்ற சீசனில் பல குளறுபடிகள் நடைபெற்றது. இதனால் கமலஹாசனை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதற்கு காரணம் பிரதீப் விஷயத்தில் இவர்கள் செய்த தவறுதான். ஆனாலும் அதை சரி எனவே பலர் நியாயப்படுத்தியும் உள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8வது சீசனுக்கு புதிய ப்ரோமோ விஜய் சேதுபதி தலைமையில் வெளியாகி உள்ளது. அதில் பொதுமக்கள் தங்களுடைய அட்வைஸை விஜய் சேதுபதிக்கு அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள 10 முக்கிய நகரங்களில் இந்த ப்ரோமோ  எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதில் பேசிய பொதுமக்கள் காய்கறியில் நல்லது எது கெட்டது எது என்பதை பார்த்தாலே தெரியும். ஆனா மனுசங்கல்ல அப்படி இல்ல என்று ஒரு அம்மாவும்,  தப்பான கார்ட்டை யாருக்கும் கொடுக்காதீர்கள் தெரியலன்னா என்ன பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று கிண்டலாக பேசியுள்ளான் சிறுவன் ஒருவன்.

மேலும் இளகின மனசு எல்லாம் பிக் பாஸ் வீட்டில் வேண்டாம், ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசுவாங்க. அதனால வளவளவென்று வாழைக்காய் பஜ்ஜி போல இழுக்காம மொளகா பஜ்ஜி போல சுருக்கமாக முடிக்க வேணும் என்று பொது மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.

Advertisement

Advertisement