• Jan 19 2025

பலர் தவறான வாழ்க்கை வாழுறாங்க.. விவாகரத்து பற்றி த்ரிஷா அளித்த பேட்டி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகினர் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் தான் ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து விஷயம். ஏற்கனவே இந்த விவகாரம் சமூக வலைத்தள பக்கங்களில் புகைந்து வந்தது. தற்போது அதை உறுதியாகும் வகையில் ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தார்.

இன்றைய தினம் ஜெயம் ரவியின் காதல் மனைவியான ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் விவாகரத்து விஷயம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. இந்த முடிவு ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்தது என்றும் இது தன்னை மிகவும் கவலை அடைய வைத்துள்ளதோடு எதிர்காலத்தில் தன்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கு இடையேயும் இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் காணப்பட்டவர் தான் ஜெயம் ரவி. அத்துடன் தனது மனைவி, பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். ஆனால் அவர் திடீரென இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

இந்த நிலையில், நடிகை திரிஷா திருமணம் பற்றியும் விவாகரத்து பற்றியும் இணையத்தில் பேசியது தற்போது உலா வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், என்னிடம் பலர் மிகவும் சாதாரணமாக எப்போது திருமணம் என்று கேட்பார்கள். ஆனால் எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது. குறிப்பாக நான் யாருடன் எதிர்காலத்தை எடுத்துக் கொள்ளப் போகிறேன். அவரை எப்போது சந்திப்பேன் என்று கூட தெரியாது. அப்படி ஒருவரை பார்க்கும் போது மீதமுள்ள வாழ்க்கையை அவருடன் வாழப்போகின்றேன் என்று தோன்ற வேண்டும்.

எனக்கு விவாகரத்தில் நம்பிக்கையும் இல்லை. நாட்டமும் இல்லை. உறவில் இருந்து நான் பின்வாங்க போவதும் இல்லை. அதே நேரத்தில் என்னைச் சுற்றி ஆயிர கணக்கான திருமண தம்பதிகள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தவறான காரணத்திற்காகவே வாழ்ந்து வருகின்றார்கள். திருமண வாழ்வில் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. 

மேலும் குழந்தை, பெரியவர்கள், குடும்பத்தினர் போன்ற தவறான காரணங்களுக்காக இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் எனது நண்பர்களை பலர். இதுபோன்ற திருமணத்தை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு சரியான வரை சந்திக்கும் வரை நான் காத்திருக்க தயாராக உள்ளேன். இது நடக்கவில்லை என்றாலும் எனக்கு திருமணமே நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement