• Oct 16 2024

'பிளடி பெக்கர்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு! வெளியான வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கவின். இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் இவரை பட்டித் தொட்டி எங்கும் பேமஸ் ஆக்கியது. அதில் இவருடைய வேட்டையன் கேரக்டர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய கவினுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப் பெட்டியுடன்  வெளியே வந்தார். இடையில் லொஸ்லியாவுடன் காதலிலும் விழுந்தார். ஆனால் அவர்களுடைய காதல் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததுமே முடிவுக்கு வந்துவிட்டது.

இதை தொடர்ந்து படங்களில் நடிக்க பிஸியான கவின், முதன்முதலாக லிப்ட் படத்தில் நடித்தார். அதன் பின்பு நடித்த டாடா திரைப்படம் இவருடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


அதன் பின்பு சமீபத்தில் ஸ்டார் திரைப்படம் வெளியானது. அதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றது. பிறகு பிளடி பெக்கர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் கவின். இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் தயாரிக்க, இதனை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். 

இந்நிலையில், பிளடி பெக்கர் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'நான் யார்'?? என்ற முதலாவது பாடல் நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்கள்.

 

Advertisement