தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான பாடல் வரிகளால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி குறித்து தனது அனுபவத்தைப் பேசியுள்ளார்.
மேலும், "நான் எழுதிய நிறைய பாடல்கள் ரசிகர்களிடம் பிரபலமானது. ஆனாலும், என் தனிப்பட்ட வாழ்க்கையில் எனது மனதைக் கொள்ளை கொண்ட சில பாடல்கள் இருக்கின்றன. அந்த வகையில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது இசையிலும், பாடல்களிலும் ஒரு இயல்பான உணர்ச்சி கலந்திருக்கின்றது. எவ்வளவு நேர்த்தியான இசை அமைப்பு இருந்தாலும், அவர் பாடல்களில் இருக்கும் உண்மை உணர்வை எதனாலும் மறைக்க முடியாது" என்று சூப்பர் சுப்பு தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, "விஜய் ஆண்டனி மாதிரி நான் ஒரு நல்ல மனிதரை இன்னும் பார்த்ததே இல்லை எனவும் தெரிவித்தார். அவரை எப்பொழுது நேரில் சந்தித்தாலும், எளிமையான நடத்தை, மற்றவர்களை மதிக்கும் அணுகுமுறை மற்றும் அழுத்தமில்லாமல் பேசும் விதம் என அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்" எனவும் கூறியுள்ளார்.
பொதுவாகவே, தன்னுடைய இசைத் தேர்வுகள் மற்றும் ரசனையில் மிகவும் நேர்த்தியுடையவராக கருதப்படும் சூப்பர் சுப்பு. தன்னை ஒரு சாதாரண ரசிகனாகக் குறிப்பிட்டு விஜய் ஆண்டனியின் இசை மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியுள்ளார். "இன்று பல இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், எளிமையான சிறிய சொற்களில் பெரிய உணர்வுகளை சொல்லும் திறமை விஜய் ஆண்டனிக்கே சொந்தம். அதனால் தான் அவருடைய பாடல்கள் எப்பொழுதும் தமிழ் திரையுலகில் சிறப்பாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Listen News!