தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பில் மட்டுமின்றி இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள அவர், ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இந்த நிலையில், விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ‘எதிர்நீச்சல்’, ‘கொடி’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிரடி மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை கையாள்வதில் கவனம் பெற்ற துரை செந்தில்குமார், இந்த முறை விஷாலுடன் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தை முன்னணி தயாரிப்பாளரான லலித்குமார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷாலின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்தப் படம் அமையுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் விஷால் எப்படி களமிறங்கப் போகிறார் என்பதே தற்போதைய சினிமா வட்டாரத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதனால் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!