இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தத் படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் லீடு ரோலில் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் இந்த வாரம் வரிசையாக தினமும் மதியம் 12 மணிக்கு வெளியாகி வந்தன. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் மட்டுமே அந்த போஸ்டர்களை வெளியிட்ட நிலையில், பாகுபலி ரேஞ்சுக்கு புரமோஷன் பண்ணாதான் பான் இந்தியா அளவில் படம் ஹிட்டாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஒரு வழியாக டீசரை பாலிவுட்டின் முன்னணி நடிகரை வைத்து வெளியிட இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம். அதன் படி நாளை (ஜூலை 8) மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாக போகிறது என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் ஹிந்தி டீசரை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட உள்ளார் என்றும் முன்னதாக இந்த படத்தில் சுந்தர சோழனாக அமிதாப் பச்சன் தான் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியானது. ஆனால், மருமகள் ஐஸ்வர்யா ராயை எப்படி தனக்கு ஜோடியாக்கி நடிப்பது என நினைத்த நிலையில், அவர் இந்த படத்தில் இருந்து விலகினார் என்றும் கூறப்பட்டன. இந்நிலையில், ஹிந்தி டீசரை அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரிலீஸுக்கு முன்பாகவே தூள் கிளப்பும் மை டியர் பூதம்-சந்தோஷத்தில் படக்குழுவினர்
- இரு பெரும் ஹீரோக்களுக்கு வில்லனாகும் நடிகர் விஜய் சேதுபதி
- திருமணம் முடிந்த கையோடு ஸ்ராட் மியூசிக் அஜய் கிருஷ்ணா எடுத்த திடீர் முடிவு
- மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ரச்சிதாவின் கணவர்-அதுவும் எந்த டிவியில் தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!