• Jan 19 2025

ராமமூர்த்தியின் சொத்துக்கள் யார் யாருக்கு? பாக்கியா கண்டெடுத்த பொக்கிஷம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா கோபியுடன் காலேஜுக்கு செல்கின்றார். செல்லும் வழியில் தாத்தா பாட்டியை நினைத்து அழுகின்றார். மேலும் தன்னால் அவர்கள் நிறைய கஷ்டப்பட்டதாகவும், இப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து வந்து என்னை காலேஜில் இருந்து அழைத்து வர மாட்டார்களா என்று ஏங்குகிறார். இதனால் அவருக்கு கோபி ஆறுதல் சொல்லுகின்றார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா ராமமூர்த்தியின் ஆடைகளை எல்லாம் கபோட்டில் இருந்து எடுத்து செல்விக்கு கொடுக்கின்றார். இதன் போது இருந்த அலுமாரியில் இருந்த பையொன்றிலிருந்து ராமமூர்த்தி எழுதி வைத்த உயிரையும் சில லெட்டர்களையும் எடுக்கிறார்.

அதன்படி ராமமூர்த்தி எல்லோருக்கும் லெட்டர் எழுதி வைத்ததாக சொல்லி அழுகின்றார். அதன் பின்பு ஒவ்வொருவருக்கும் ராமமூர்த்தி எழுதிய லெட்டரை கொடுத்துவிட்டு அவர் எழுதி வைத்த உயிரை செழியன் வாசிக்கின்றார்.


அதில் தனக்கிருக்கும் சொத்துக்களில் ஊரில் உள்ள வீட்டை பாக்கியாவுக்கு எழுதி வைக்கின்றார். மேலும் அக்கவுண்டில் சில பணம் போட்டு வைத்திருப்பதாகவும் அதை இனியாவின் கல்யாணத்திற்கு எடுக்குமாறும், ஈஸ்வரிக்கு பென்ஷன் வருவதற்குரிய டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் அதில் வைத்துள்ளதாகவும் தன்னிடம் இருந்த நகைகளை பேரன், பேத்திகளுக்கு கொடுக்குமாறு எழுதியுள்ளார். இதை பார்த்து எல்லாரும் அழுகின்றார்கள்.

அதன் பின்பு ஈஸ்வரியும் பாக்கியாவும் தமக்கு எழுதி வைத்த லெட்டரை வாசித்து அழுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement