• Oct 13 2024

ஜீவாவை இழுத்து மனோஜுடன் சண்டை போட்ட ரோகிணி.. இறுதியில் ஸ்ருதி கொடுத்த ட்விஸ்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வித்யா ரோகினிக்கு கால் பண்ணி வீட்டின் ஓனர் அட்வான்ஸ் கேட்டதாகவும் சீக்கிரம் தரவில்லை என்றால் அதை இன்னொருவருக்கு கொடுப்பதாகவும் சொல்லி கதைத்துக் கொண்டிருக்க, அந்த இடத்திற்கு மனோஜ் வந்ததும் பேச்சை நிப்பாட்டுகின்றார்.

அதன் பின்பு தனது நண்பிக்கு அவசரமாக ஒரு லட்சம் வேண்டும் அவரது கணவர் துபாயில் உள்ளார். ஒரு மாசத்தில் திருப்பி கொடுத்துவிடுவார். பணம் தாரியா? என ரோகிணி மனோஜிடம் கேட்க, அவர் தரமாட்டேன் என்று சொல்கின்றார். ரோகினி மீண்டும் மீண்டும் கேட்கவும் உனக்கு வேண்டுமென்றால் தருவேன் ஆனால் வேறு யாருக்கும் தரமாட்டேன் என்று மனோஜ் உறுதியாக சொல்லுகின்றார் .

இதனால் கோபப்பட்ட ரோகிணி அப்படி என்றால் ஜீவாவுக்கு மட்டும் கொடுத்து ஏமாந்தியே என ஜீவாவை இழுத்து பேசவும், மனோஜ் பணம் தர மாட்டேன் என்று கிளம்பி விடுகின்றார் .


மறுபக்கம் மீனா கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருக்க அங்கு வந்த ஸ்ருதியும் தனக்கும் போடுமாறு சொல்லுகின்றார். அந்த நேரத்தில் ரோகிணியும் கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடிக்க செல்கிறார்.

இதன்போது ரோகினி ஸ்ருதியிடம் தனது நண்பிக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. உங்களிடம் காசு எடுக்க முடியுமா எனக் கேட்க, இடையில் மீனா என்னத்துக்கு? எதுக்கு? என்று ஸ்ருதிக்கு  சொல்லுகின்றார். இவ்வாறு இருவரும் பண விஷயத்தில் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்க, இறுதியில் ஸ்ருதி ஒன்று காசை வட்டிக்கு கொடுக்கலாம் இல்லையென்றால் அவர்களிடம் பேசி புரிய வைத்து அந்த விடயத்தை அப்படியே விட்டுவிடலாம் என்று சொல்ல, இதுதான் சரியான முடிவு என மீனாவும் ரோகிணியும் சொல்லிவிட்டு போகின்றார்கள்.

அதே போல முத்துவும் மனோஜும் பண விடயத்தில் மாறி மாறி வாக்குவாத பட்டுக் கொண்டிருக்க, அதே தீர்ப்பை ரவி சொல்ல, மனோஜ் தனக்கும் கிளியர் ஆகிவிட்டது என்று செல்கிறார்.

அதன் பின்பு ரூமுக்கு வந்த ரோகினி ஆரம்பத்திலேயே வட்டிக்கு காசு கேட்டிருந்தால் மனோஜ் கொடுத்திருப்பான் இப்போது எப்படி கேட்பது என யோசித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement