• Oct 08 2024

போர்ஷா கார் வாங்கிய அஜித் குமார்.. அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பைக்கில் உலகை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமாரிடம் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளன. ரூ. 34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்திருக்கிறார் அஜித். கடந்த ஜூலை மாதம் தான் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் வாங்கினார்.


துபாயில் தான் வாங்கிய ஃபெராரியுடன் அஜித் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் Porsche GT3 RS கார் வாங்கியிருக்கிறார். தன் புது காரை அஜித் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.


அஜித் வாங்கியிருக்கும் போர்ஷா காரின் விலை ரூ. 3.5 கோடி மட்டுமே. முன்னதாக தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் போர்ஷா ஜிடி3 ஆர்எஸ் கார் வாங்கினார். அஜித் குமாரை போன்றே நாக சைதன்யாவுக்கும் வேகமான கார்கள், பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

 

Advertisement